உள்நாடுசூடான செய்திகள் 1

வைத்தியசாலை கொள்ளையை முறியடித்த பொலிஸ் அதிகாரி பலி

(UTV | கொழும்பு) – தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற ரூபா.79 இலட்சம் கொள்ளையை முறியடித்த கான்ஸ்டபள் (22 ) விபத்தொன்றை அடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான எஸ். அழகப்பெரும என்ற புலனாய்வுத்துறை அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு சம்புத்வ ஜயந்தி மாவத்தை பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இவர் காயமடைந்திருந்தார்.

இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (14) அதிகாலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாராளுமன்றம் வெள்ளிகிழமை(21) வரை ஒத்திவைப்பு

சைபர் தாக்குதல் – அச்சுத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் மீட்டெடுக்கப்பட்டது

editor

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு