வகைப்படுத்தப்படாத

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

(UTV|PHILIPPINES)-பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பிலிப்பைன்சில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ரொபட் முகாபேயின் 37 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது

தேர்தல் காலப்பகுதியில் 1148 தேர்தல் முறைப்பாடுகள்

Dayasiri appears before PSC