உலகம்

வெள்ளத்தால் இதுவரை 140 பேர் பலி

(UTV | சீனா) – சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 140 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்நிலையில் அங்கு மழை வெள்ளத்தை தடுக்க வெடி வைத்து அணை தகர்க்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. உன்னான், குவாங்ஜி, திபெத், குய்சோவ், அன்குய், ஜிலின், லியானிங் உள்ளிட்ட மாநிலங்களில் மழை விடாமல் கொட்டித்தீர்த்து வருகிறது. சீனாவில் உள்ள ஆசியாவிலேயே மிக நீளமான யாங்சி நதி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

Related posts

மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் உறுதி

“தீவிரவாத தாக்குதல்களை கொண்டாடக்கூடாது” பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பலஸ்தீனுக்கான உலக நாடுகளின் ஆதரவு: சிக்கலில் இஸ்ரேல் பிரதமர்