உள்நாடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையில் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்து விட்டது – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) –

வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முன், சர்வதேச தொழிலாளர் சந்தை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தகுதியான புலம்பெயர் தொழிலாளர்களை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதேபோன்று எமது நாட்டுக்கு ஏற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும்,இதற்கு அனைத்து பொறுப்பு வாய்ந்த தரப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட காலம் முடிந்து மீண்டும் தாயகம் திரும்பியதும் மகிழ்ச்சியாக வாழும் சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு தொழிலாளர் சந்தை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

பெண் ஊழியரை தாக்கிய அரச பொறியியலாளர் கைது