உள்நாடுசூடான செய்திகள் 1

வெளிநாட்டு பணத்தில், 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு

(UTV | கொழும்பு) –   ஐந்து வருடங்களுக்குள் 41.5 பில்லியன் டொலர் மொத்த வெளிநாட்டுக் கடனில் 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதற்கேற்ப உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சற்று முன்னர் கம்பஹா மாவட்ட செயலக புதிய கட்டிடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை பெறுவதற்காக இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் நிதி கிடைக்கவுள்ளது.

குறித்த நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியின் பின்னர் நாடு பெற்றுள்ள மிகப் பெரிய நிதி உதவி இதுவாகும்.

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, மீதமுள்ள 200 மில்லியன் டொலர் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு

உடனடியாக எரிபொருள், மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்

ரணில் – அனுர டீல் வலுவானதாக காணப்படுகிறது – விமல் வீரவன்ச

editor