சூடான செய்திகள் 1

வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) நேற்று (03) வெள்ளிக்கிழமை  நாத்தாண்டிய அசோகபுர பிரதேசத்தில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

மதர வீதி, ஹெட்டிவத்த, நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், மாரவில் பொலிஸார் சந்தேக நபருடைய வீட்டை நேற்று வெள்ளிக்கிழமை (03) சோதனை செய்தனர்.

இதுதொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஸ்ரீ.ல.சு.கட்சி கூட்டம் இன்று மாலை

ஜாகிலிய்யத்தை கக்கும் நியாஸ் – முன்னாள் புத்தள பிரதி நகர பிதா அலிகான் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை