சூடான செய்திகள் 1

வெலே சுதாவின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO) கம்பொல விதானகே சமந்த குமார எனும் வெலே சுதாவினால் தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையினை சவாலாகக் கொண்டு மேன்முறையீடு செய்யப்பட மனுவினை எதிர்வரும் 15ம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(07) உத்தரவிட்டுள்ளது.

2008ம் ஆண்டு கல்கிஸ்சை பிரதேசத்தில் ஹெரோயின் 07g இற்கு அதிகமாக தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி வெலே சுதாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா உறுதி [VIDEO]

இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

விலைமதிப்பற்ற கஜமுத்துக்களுடன் நால்வர் கைது