உள்நாடு

வெலி ஓயாவில் நீராடச் சென் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

(UTV |  பதுளை) – ஹல்தமுல்ல – வெலி ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பதுளை – ஹல்தமுல்லை – களுபான – வெலி ஓயாவில் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ள தந்தையையும், மகனையும் தேடும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நான்கு பேரில், தந்தையும், மகனும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

இதேநேரம், ஏனைய இரண்டு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல் [VIDEO]

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சலசலப்பு – காற்றாலை மின் உற்பத்தி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

editor