சூடான செய்திகள் 1

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சமரசம்…

(UTV|COLOMBO)-போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கைதி ஒருவரை வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண் கைதிகள் சிலர் நேற்றும்(20) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் அமைதியின்மையுடன் செயற்பட்ட பெண் கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த கைதிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய குறிப்பிட்டுள்ளார்.

அமைதியின்மையுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டவர்கள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக துஷார உபுல் தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் கைதிகள் இதற்கு முன்னர் சிறைச்சாலை கூரைமீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விஜயகலாவின் சர்ச்சை கருத்து குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டது

தொழிலிட வன்முறைகள் தொடர்பான முறைபாடுகள் குறைந்துள்ளது.

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக எழுந்துள்ள உண்மைக்கு புறம்பான கருத்து