சூடான செய்திகள் 1

வெலிக்கடை சிறைச்சாலை பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை வழங்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)-வெலிக்கடையில் அமையப் பெற்றுள்ள சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் அதிகாரிகளை பணியில் அமர்த்துவதற்கான அனுமதியினை வழங்குமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை சிறைச்சாலை வட்டாரத்திற்குள் கொண்டு வருவதனை கட்டுப்படுத்தவே குறித்த பொலிஸ் அதிரடிப் படையினரின் உதவி தேவைப்படுவதாகவும் சிறைச்சாலை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை, வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை ஆகிய இடங்களில் குறித்த அதிரடிப் படை வீரர்களை பணியில் அமர்த்த எதிர்பார்க்கப்படுவதாகும் தெரிவிக்கபப்டுகின்றது.

தற்போது, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மாத்திரம் பொலிஸ் அதிரடிப் படையினர் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இறக்காமம் மண் வானை நிமிர்ந்து பார்க்கிறது; 19 வயதில் விமானியாய் பறக்கும் முஹன்னா மௌலானா!

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு

பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு