வகைப்படுத்தப்படாத

வெயங்கொடயில் காரொன்று ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழப்பு

(UTV|GAMPAHA)-வெயங்கொட ஹீன்தெனிய பட்டகொட ரயில் மார்க்கத்தில் காரொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வெயங்கொட நோக்கி பயணித்த கார், ரயில் குறுக்கு வீதியை கடக்கும் சந்தர்ப்பத்தில், கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் ரயிலுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த நால்வரில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்திற்குள்ளான கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தினால் வடக்கு மார்க்க ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

North Korea in second missile launch in a week

Veteran Radio Personality Kusum Peiris passes away

சிரிய குண்டுத் தாக்குதலில் 39 பேர் பலி