சூடான செய்திகள் 1

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – வென்னப்புவ பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துலக்ஷி பெர்ணான்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோர் எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

துலக்ஷியின் சகோதரி சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய அனுமதிப்பத்திரங்கள் இன்றி அதிவேகத்தில் பயணித்துள்ள போது, வென்னப்புவ – சீனோர் சந்தியில் வைத்து பொலிசாரின் கைது செய்ய முற்பட்ட போது, துலக்ஷி பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் இன்று கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

சமூக ஊடகங்கள் பற்றி ஆராய ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் இன்று இலங்கை வருகை

பூஜித் – ஹேமசிறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்