சூடான செய்திகள் 1

வெசாக் நோன்மதி தினம் இன்று(18)

(UTV|COLOMBO) வெசாக் நோன்மதினம் இன்று கொண்டாடப்படுகிறது. புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் என்ற நிலையை அடைந்தமை, பரிநிர்வாணம் போன்ற மூன்று நிகழ்வுகளும் வெசாக் போயா தினத்தில் இடம்பெற்றதாக பௌத்த இதிகாசங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

புத்தர் என்ற நிலையை அடைந்ததன் பின்னர், கிம்புல்வத்புர என்ற இடத்திற்கு விஜயம் செய்த மனித வர்க்கத்திற்கு வழிகாட்டிய நிகழ்வும் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தபெருமானின் 3வது இலங்கை விஜயமும் வெசாக் தினத்தில் இடம்பெற்றிருக்கிறது. புத்தபெருமானின் புனி சிவனொளிபாதமலைக்கான விஜயமும் இதன் போது இடம்பெற்றிருக்கிறது.

தீகவாபி உட்பட இலங்கையின் 12 இடங்களுக்கு புத்தபெருமான் விஜயம் செய்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விஜயன் 500 தோழர்களுடன் இலங்கைக்கு வருகை தந்ததும் வெசாக் போயா தினத்தில் என்று மஹாவம்சம் கூறுகின்றது.

துட்டகைமுனு மன்னன் றுவன்வெலி சாயவை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டிய நிகழ்வும் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றிருக்கிறது.

 

 

 

Related posts

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை 75% குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ..!

O/L பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்