அரசியல்உள்நாடு

வீறாப்பு பேசியவர்களால் இன்று எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன – சஜித் பிரேமதாச

மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கத் தக்க இந்த பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது. சொன்னவற்றுக்கும், செய்து கொண்டிருப்பதற்கும் மத்தியில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அரிசி, உப்பு, தேங்காய்ப் பிரச்சினை முதல் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு கையொப்பத்தால் தீர்த்துவிடுவோம் என கூறினாலும், இன்னும் இவர்களால் இவற்றுக்கு தீர்வு காண முடியவில்லை.

76 ஆண்டுகால அரசியலுக்கு தவறான சித்தரிப்புகளை உருவாக்கி, அதனை மக்கள் மனதில் நிறுத்தி, நாட்டு மக்களை பொய்யான செய்திகளால் தவறாக வழிநடத்தி, பெறுமதியான மக்கள் ஆணையைப் பெற்று, இன்று மக்களை செய்வதறியா நிலைக்கு தள்ளி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

குருநாகல் மெல்சிறிபுர நகரத்தில் இன்று (02) நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் பாரிய அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பற்றாக்குறைக்கு மத்தியில் நுகர்வோர், விவசாயிகள் என இருபாலரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

அறுவடை நேரத்திலும் கூட நெல்லுக்கான உத்தரவாத விலையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை பெற்றுத் தருவோம் என அரசாங்கத்தினர் கூறினர். ஆனால் தற்போது 80 ரூபாய்க்கே சந்தையில் விற்கப்படுகின்றன.

நெல்லுக்கான உத்தரவாத விலையை சட்டப்பூர்வமாக்குவோம் என்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கூறியவர்களால் இன்று உத்தரவாத விலையை நிர்ணயிக்க முடியவில்லை.

நெல் கொள்வனவு செய்வதற்காக திறைசேரி ஒதுக்கிய பணத்தைக் கோரிய கடிதத்தைக் கூட வழங்க முடியாத ஆட்சியே நாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Related posts

மின்கட்டணத்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்

காணாமற்போயுள்ள இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் கோரிக்கை