சூடான செய்திகள் 1

வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு பாராளுமன்றில் நேற்று(07) அனுமதி வழங்கியுள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதி பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டமாக 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு நான்கு வேக பிரிவுகளின் அடிப்படையில் 3000 ரூபா – 25000 ரூபா வரை தண்டம் விதிக்கப்படவுள்ளது.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்தி உயிரிழப்பினை ஏற்படுத்தினால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன், விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு இரு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டு சாரதி அனுமதி பத்திரத்தையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

சப்ரகமுக பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு சவுதி அரசாங்கத்தின் உதவி

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் சதொச நிறுவனத் தலைவருக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை