சூடான செய்திகள் 1

வீதி மின்குமிழ்கள் முகாமைத்துவ வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-நாட்டில் வீதி மின்குமிழ்கள் தொடர்பான தேசிய திட்டமொன்று வகுக்கப்படவுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

பிரதேச பொதுமக்கள் ஆலோசனை தொடர்க்கூட்டங்கள் பல இது தொடர்பில் இடம்பெறவுள்ளன. அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், 9 ஆலோசனைச் சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் கருத்து வெளியிட்டார்.

இந்தப் பிரதேச ஆலோசனைச் சேவைகளில் குடிநீர் மற்றும் எரிபொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இவற்றைக் கவனத்திற்கொண்டு அதற்குத் தேவையான சிபார்சுகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு மக்கள் வேறுபடக் கூடாது…

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்