உள்நாடு

வீட்டிலேயே பயன்படுத்த கூடிய ரெபிட் என்டிஜன் பரிசோதனை

(UTV | கொழும்பு) – இலங்கையில் வீட்டில் இருந்து சுய கொவிட் பரிசோதனை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தான் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளேனா என வீட்டிலேயே கண்டுபிடிக்க கூடிய வகையில் இது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் வீட்டிலேயே பயன்படுத்த கூடிய ரெபிட் என்டிஜன் பரிசோதனை ஒன்று அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

வெள்ளவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

‘நெதுன்கமுவ ராஜா’ உயிரிழந்தது

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று