உள்நாடு

வீடமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

(UTV | கொழும்பு) – வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி குறித்த அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், அங்கு சேவை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்ட ஜனாதிபதி, அவரது தேவை மற்றும் விபரங்களை கேட்டறிந்தார்.

மக்கள் தேவைகளை வினைத்திறனாகவும் குறைவின்றியும் நிறைவேற்றுவது அரச ஊழியர்களின் அடிப்படை பொறுப்பாகுமென ஜனாதிபதி பணிக்குழாமினரிடம் தெரிவித்தார்.

Related posts

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

editor

சஷி வீரவன்சவை கைது செய்ய பிடியாணை

கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு

editor