உள்நாடுசூடான செய்திகள் 1

வில்பத்துவை அழிக்கச்சென்ற பவித்ராவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தடை

விடத்தல்தீவு(வில்பத்து என அழைத்த ) இயற்கை சரணாலய பகுதியின் ஒரு பகுதியை இறால்பண்ணை திட்டத்திற்கு ஒதுக்கும் வகையில் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மீன் வளர்ப்பு தொழில்பூங்காவை அமைப்பதற்காக,  மன்னார் மாவட்டம் விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் என  குறிப்பிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தல் முடிவிற்கு வருவதாக  மேமாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியிருந்தது.

எனினும் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராக சூழல்நீதிக்கான நிலையம் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்தது.  இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

Related posts

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

இன்று முதல் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை

கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை