அரசியல்உள்நாடு

விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த நபர் கைது

வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைந்து விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேற அங்கிருந்த அதிகாரிகளிடம் அனுமதி கோரினார்.

ஆனால், அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது என்று கூறியதால் அவர் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி

“கண்டி பெருநகர அபிவிருத்திற்கு” நிதி ஒதுக்கீடு – ஜானக வக்கும்புர

தயாசிறிக்கும் கொரோனா