உள்நாடுவிளையாட்டு

விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தரவின் சாதனை

(UTV | கொழும்பு) –  இலங்கை விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்து புதிய ஆசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

அவர் நீந்திச் சென்ற மொத்த தூரம் 59.3 கிலோ மீற்றர் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது.

இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஆனந்த குமார் என்ற நபர் இந்த சாதனையை படைந்திருந்த நிலையில் அவருக்கு குறித்த தூரத்தை கடக்க 51 மணித்தியாலங்கள் எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உச்சம் தொடும் மரக்கறிகளின் விலைகள்

editor

சமல் ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

மீண்டும் அமெரிக்க குடியுரிமையாக விரும்பும் கோட்டாபய ராஜபக்ஷ