சூடான செய்திகள் 1

விடுமுறைக்கு வீட்டிக்குச் சென்ற இளைஞர் சிறுமிக்கு செய்த காரியம்….

(UTV|COLOMBO)-காலி ஹக்மீமன பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொழும்பில் அச்சகம் ஒன்றில் பணியாற்றுபவர் என்பதோடு அவர் மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய நிரந்தர வசிப்பிடத்திற்கு செல்வது வழக்கமாகும்.

இவ்வாறு சென்றிருந்த போது அயல் வீட்டில் வசிக்கும் ஆறு வயது சிறுமியை மிகவும் சூட்சமமான முறையில் ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறுமியின் தாயார் கணவனை விட்டு பிரிந்து வாழ்கின்ற நிலையில் அன்றைய தினம் சிறுமியின் தாய் கொழுந்து பறிப்பதற்காக சென்றிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்திலேயே சிறுமியை குறித்த இளைஞர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை தொடர்ந்து தாயாரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

2020 ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம்