கேளிக்கை

விஜய்சேதுபதியின் செல்லப்பிள்ளையாக மாறிய இளம் நடிகர்

கடந்த ஆண்டு கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ‘தேவராட்டம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ஒன்றின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘செல்லப்பிள்ளை’ என்ற டைட்டிலை சற்றுமுன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அருண்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கவுள்ளது. மதுரையை மையமாக கொண்ட இந்த படத்தில் சூரி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி

யுவனையே அசத்திய படம்

ரஜினியுடன் இணையும் த்ரிஷா மற்றும் அஞ்சலி