உள்நாடு

விசேட தடுப்பூசி வேலைதிட்டத்திற்கு அனைத்தும் தயார்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

தியத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக் கொள்ளுமாறு மக்களை வலியுறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முயற்சி [VIDEO]

ரோஸி யாழ். விஜயம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு