சூடான செய்திகள் 1

வாழ்வுரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்கப்பட வேண்டும்

(UTVNEWS|COLOMBO) – உயிர் வாழ்வதற்கான வாழ்வுரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்கப்பட வேண்டும் என தெரிவித்து கிளிநொச்சியில் கையொப்பம் திரட்டல் இன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கையொப்பம் திரட்டும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சேவை சந்தை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இடம்பெற்றது.

இதேவேளை குறித்த விடயத்தை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றதுடன், மக்களிடம் கையொப்பங்களும் பெறப்பட்டன.

Related posts

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

ஈயினால் பரவும் தோல் நோய்…

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை