வகைப்படுத்தப்படாத

வாட்ஸ் அப்பில் புதிய வசதி!

(UDHAYAM, COLOMBO) – உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் அவ்வப்போது தனது பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்ககிவரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்சன் என்ற மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய அதிரடி அம்சங்கள் பயனாளிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி வாட்ஸ் அப் பயனாளிகள் மெசேஜ் அனுப்புவதிலும், எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.

அதாவது வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பீட்டா அப்டேடில் நீங்கள் உங்கள் நண்பர் நாம் அனுப்பும் மெசேஜை தேவை இல்லையெனில் 5 நிமிடங்களுக்குள் அன் சென்ட் (unsent ) அல்லது எடிட் (edit) செய்யும் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியால் ஒருவேளை தவறாக ஏதாவது மெசேஜ் அனுப்பிவிட்டால் திருத்தி கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதுவரை சாதாரண டெக்ஸ்ட்களில் மட்டுமே மெசேஜ் அனுப்பப்பட்டு வந்த நிலையில் இனிமேல் சில குறிப்பிட்ட எழுத்துகளை மேற்கோள் செய்து காட்ட, இட்டாலிக் மற்றும் போல்ட் ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த புதிய வசதியை பெறுவதற்கு உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்களில் வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற வெர்ஷனை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

North Korea missile launch ‘a warning to South Korean warmongers’