உள்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பொதுத்தேர்தல் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்ட நிலையில், எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேசிய அடையாள அட்டை உரித்துடைய அனைத்து பிரஜைகளும் தங்களது பெயர்களை தேர்தல் பட்டியலில் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் பெயர் பட்டியலை பூர்த்தி செய்து கிராம அலுவலகரிடம் அதனை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று உருவாகவுள்ள நிசர்கா

பொன்சேகா: ஐ.ம.ச மனுவைப் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது!

மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு