உள்நாடு

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – பொலன்னறுவை கிரித்தலை பகுதியில் இன்று அதிகலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மேலும் 8 பேருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பொலன்னறுவ – ஹபரன பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இராணுவ வாகனவே பாதை விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரித்தலை இராணுவ முகாமைச் சேர்ந்த 31 வயதான இராணுவ வீரர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனத்தில் 10 இராணுவத்தினர் பயணித்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

editor

கரையோர வாழ் மக்கள் அவதானம்

மேலும் 706 பேர் பூரணமாக குணம்