உள்நாடு

வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் கருவி

(UTV | கொழும்பு) – கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்கு பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இராஜகிரிய, நுகேகொடை, பொரள்ளை, காலி வீதி ஆகிய பிரதான வீதிகளில் விமானப் படையினரின் ட்ரோன் கருவிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்குள் வினைத்திறன் மிக்க போக்குவரத்து முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக பொலிஸாருடன் இணைந்து ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

Related posts

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி

செலவின வரம்புகள் மீறப்பட்டால், நிறுவன தலைவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்