உள்நாடு

வலுக்கும் கொரோனாவும் தொடரும் முடக்கங்களும்

(UTV | கொழும்பு) – நான்கு மாவட்டங்களில், பொலிஸ் அதிகார பிரிவு ஒன்றும், ஏழு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் அதிகார பிரிவும், களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகார பிரிவின், வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய மற்றும் மாலமுல்ல கிழக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் அதிகார பிரிவின், உவர்மலை கிராம சேவகர் பிரிவு, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவின் அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின், வலப்பனை காவல்துறை அதிகார பிரிவின், நில்தண்டாஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து அரசு கவனம்

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..! நால்வர் காயம்…