கேளிக்கை

வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால்

(UTV|INDIA)-காதல் நாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால், திடீரென்று விரலை சுழற்றி நரம்பு மண்டலத்தை தாக்கும் வர்மக் கலை பயிற்சி கற்க தொடங்கியிருக்கிறார். இது அவரது தற்காப்புக்காக மட்டுமல்ல ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்கும் கதாபாத்திரத்துக்காகவும்தானாம். இந்தியன் முதல் பாகத்தில் வர்மக் கலை மூலம் எதிரிகளை பழிவாங்கும் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் ஏற்றிருந்தார் கமல்.

அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வெறுமனே பாடல் காட்சியில் நடித்துவிட்டு சென்றுவிடாமல் இப்படத்திற்காக வர்மக் கலை பயிற்சி எடுத்து வருகிறார் காஜல். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், வர்மக் கலை புத்தகம் படித்து வருவதுபற்றி அவர் குறிப்பிட்டிருநதார்.

இந்தியன் 2ம் பாகத்தில் கமல் மட்டுமல்லாமல் காஜல் அகர்வாலும் வர்மக் கலை தெரிந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் தற்போது கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

 

Related posts

காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்

‘நாகினி’ மௌனி ராய் திருமண ஆல்பம்

சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கடினம்