கிசு கிசு

வருடங்கள் 26 – ஆட்டம் நிறைவுறும் தருணம் இது

(UTV|COLOMBO) – பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநித்துவப்படுத்தி 26 வருடங்கள் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று(03) பாராளுமன்ற உறுப்பினராக வரையறுக்கப்பட்டுள்ளார். அது எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவின் பெயரினை சபாநாயகர் கரு ஜயசூரிய முன்வைத்திருந்தமையினால் என்றால் மிகையாகாது.

1993ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மறைந்ததன் பின்னர் அவரது இடத்திற்கு அந்நாள் பிரதமர் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதோடு, அவரினால் 1993ம் ஆண்டு மே மாதம் 07ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்படுகிறார்.

1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் கட்சியை விட்டு வெளியேறிய திவங்க காமினி திசாநாயக்க அதிக வாக்குகளால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு நியமிக்கப்படுவதோடு எதிர்கட்சித் தலைமையும் அவருக்கு கிட்டியது. அந்த வருடமே இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தினை குறி வைத்து தாக்கப்பட்ட குண்டுத் தாக்குதலில் காமினி திசாநாயக்க உயிரிழந்ததோடு, பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மற்றும் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுகிறார்.

1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்போது பலத்தில் இருந்த ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உடன் போட்டிக்காக களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்த நிலையில் 2000ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மீளவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் தோற்றுப் போனது.

2001ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 109 ஆசனங்களில் வெற்றி பெற்று முன்னணி ஒன்றினை நிறுவி ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றார்.

2004ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் பாராளுமன்ற கலைக்கப்பட்டுள்ளதோடு அதோடு, இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததோடு, 2015 ஜனவரி மாதம் 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரையில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவராக பதவியில் இருந்தார்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தினை கைப்பற்றியதின் பின்னர் உடன்பாட்டின்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி மீளவும் அதிகாரத்தினைக் கைப்பற்றி மீளவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக முன்மொழியப்பட்டார். எவ்வாறாயினும், 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ குறித்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.

குறித்த நியமனம் மற்றும் பாராளுமன்ற கலைப்பு ஆகியவை அரசியலமைப்பின்படி சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. அத்தோடு மீளவும் ரணில் விக்கிரமசிங்க 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதி ஆணையிட்டது.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்தினை கைப்பற்றி புதிய ஆட்சிக்கு இடமளித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியினர் அரசிலிருந்து விலகினர்.

1993ம் ஆண்டு முதல் பாராளுமன்றில் பிரதமர் மற்றும் எதிர்கட்சிப் பதவிகளில் இருந்த ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கின்றமை 26 வருடங்களுக்கு பின்னர் என்பதும் விசேட அம்சமாகும்.

Related posts

எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை

நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து வருவது?

மின்தூக்கிகள் 35 வருடகால பழமைவாய்ந்தவை?