உள்நாடு

வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

(UTV | கொழும்பு) –  2021ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் நடத்தப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகள் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன் கிழமை முதல் வரவு – செலவுத் திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வருகிறது.

அத்துடன் வரவு – செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரீட்சை தினங்கள் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

தென் கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது