உள்நாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரை சமய நிகழ்வுகளில் சாகல ரத்நாயக்க

(UTV | கொழும்பு) –

வரலாற்று சிறப்பு மிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹரவை முன்னிட்டு நேற்று (18) பிற்பகல் விகாரைக்கு சென்ற ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

பின்னர் பெல்லன்வில ரஜமஹா விகாரை விகாராதிபதி கலாநிதி வண. பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். கொழும்பு ஹெவலொக்சிட்டி சாம விகாரை விகாராதிபதி வண.அதபத்துகந்தே ஆனந்த நாயக்க தேரரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

73 ஆவது பெல்லன்வில வருடாந்த எசல பெரஹர, நேற்றிரவு வீதிஉலா வந்ததோடு சாகல ரத்னாயக்க,புனித கலசத்தை யானை மீது வைத்து ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஜூலை 29 ஆம் திகதி ஆரம்பமான பெல்லன்வில எசல பெரஹரவின் இறுதி ரந்தோலி பெரஹர இன்று(19) வீதிஉலா வர இருப்பதோடு நாளை(20) பெரஹர நிறைவடைகிறது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தெஹிவளை-கல்கிஸ்ஸ முன்னாள் பிரதி மேயருமான கேசரலால் குணசேகர, பொரலஸ்கமுவ முன்னாள் நகரபிதா அருண பிரியசாந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவர் நுஷாட் பெரேரா

15 மில்லியனை செலுத்திய மைத்திரி  : அவரின் மாத வருமானம் இதோ

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்