சூடான செய்திகள் 1

வரட்சியானதுமான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரானதும் வரட்சியானதுமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலையை எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனினும் கிழக்கு மாகாணம், முல்லைத்தீவு, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

இதேவளை, மத்திய, வடமேல், மேல் மற்றும் ஊவா மாகாணங்களுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் 40 கிலோ மீற்றர் வரை காற்று அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டம்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்