வகைப்படுத்தப்படாத

வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

(UDHAYAM, COLOMBO) – காலி – இமதுவ -ஹெல்லகொட பிரதேசத்தில் வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த பெண் அவரின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் கடுமையான எரிகாயங்களுடன் அவர் கராபிடிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 85 வயதுடைய ஹெல்லகொட -இமதுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணாவார்.

Related posts

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை 24ம் திகதி

பேஸ்புக்கில் பிரதமர் மோடி முதலிடம்?