உள்நாடு

வயது 12, மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, நெடு நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் உள்ள சகல பிரதான வைத்தியசாலைகளிலும் நேற்று(27) ஆரம்பமானது.

இந்நிலையில், தற்போது ஏனைய மாகாணங்களில் உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முதற் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுரவிற்கு உலக வங்கி வாழ்த்து – பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவு

editor

குற்றச்சாட்டை சுமத்தியுள்ள சஜித்

அவன்காட் தொடர்பில் சாட்சியமளிக்க 18 பேருக்கு ஆணைக்குழு அழைப்பு