வகைப்படுத்தப்படாத

வட்டக்காய் லொறியின்கீழ் சிக்குண்ட வர்த்தகரின் பரிதாபநிலை

(UTV|MATALE)-தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வட்டக்காய் ஏற்றிவந்த லொறி ஒன்று மோதியதில், வர்த்தகர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக, தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அங்குலான ரயில் பாதை பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

நொச்சியாகம பகுதியில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வட்டக்காய் கொண்டு சென்ற லொறி ஒன்று மிக வேகமாக பின்நோக்கி செலுத்தப்பட்ட போது, அப் பகுதியால் நடந்து சென்ற வர்த்தகர் லொறியின் கீழ் சிக்கிகுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை, இந்த விபத்து குறித்து அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அத்துடன், விபத்தினால் படுகாயமடைந்த வர்த்தகர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காதலனை வீட்டுக்கு அழைத்த காதலி..! காதலனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

காட்டு யானை தாக்கி நபரொருவர் பலி

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மகிந்தவிற்கு அழைப்பு