உள்நாடுசூடான செய்திகள் 1

வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைளும் நாளை (20) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண பிரதான அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடாசலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்குவதாக அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் (21) நடைபெறவிருந்த 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான 2024 இறுதித் தவணைப் பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய அருங் காட்சியகத்தில் இலவச கண்காட்சி

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலம் – குழு நியமனம்