சூடான செய்திகள் 1

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(23)

(UTV|COLOMBO)-முதலாவது வடக்கு மாகாண சபையின் காலம் நாளை(24) நள்ளிரவுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையில் சபையின் இறுதி அமர்வு இன்று(23) செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்றது.

கடந்த 2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இச் சபையின் ஐந்தாண்டு காலத்தின் இறுதி அமர்வு இன்று(23) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள மாகாண சபை செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ. வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த சபையின் ஐந்தாண்டு வரையான காலத்திற்குள் 134 அமர்வுகள் நடாத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சபையின் இறுதி அமர்வான இன்றைய தினமே சபையில் முதலாவது விடயமாக சபைக்கான கீதம் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு