வகைப்படுத்தப்படாத

வடகொரியாவால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் மரணம்

(UDHAYAM, COLOMBO) – வடகொரியாவால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பிபின்னர் கோமா நிலைக்குச் சென்றதால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் மரணமடைந்தார்.

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், வாம்பியரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்த வாம்பியர் இன்று மரணமடைந்தார். வாம்பியர் கோமா நிலைக்கு சென்றதற்கு வடகொரிய அரசின் கொடூர சித்ரவதைகள் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாம்பியரின் மரணத்தையடுத்து, வடகொரியாவில் மிருகத்தனமான ஆட்சி நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Related posts

கடல் கொந்தளிப்புடன் கூடிய காலநிலை

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

Karunaratne won’t give up on Sri Lanka’s World Cup hopes