சூடான செய்திகள் 1

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வங்காலை மீனவர் சங்க கட்டிடத்தில் (26) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி ஹரிசன் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, மன்னார் பிரதேசசபை தலைவர் முஜாஹிர், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு, மாந்தை கிழக்கு பிரதேச சபை தலைவர் நந்தன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வங்காலை முக்கியஸதர்கள் உட்பட பலர் கொண்டனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – 78 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

சாந்த அபேசேகர 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

கடுகண்ணாவ கற்பாறை வீதியில் வாகன போக்குவரத்து இடைநிறுத்தம்