சூடான செய்திகள் 1

லொறி- முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து-விபத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-அக்கறைப்பற்று – மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரிய நீலாவனை பகுதியளில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (17) பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 68 வயதுடைய செல்லத்தம்பி நமச்சிவாயம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 7 வயதுடைய சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

அல் கொய்தாவை விட பயங்கரமானது ஹமாஸ்: ஜோ பைடன்

ஊரடங்கு சட்டம் அமுலில்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா