உள்நாடுவணிகம்

லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

(UTV| கொழும்பு) – லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தெரிவித்துள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட நிலையில் சுமார் இரண்டு மாத காலமாக லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே விற்பனை நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய லொத்தர் சீட்டுக்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 29 பேர் பூரண குணம்

SLFPயின் புதிய நியமனம்!

சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்