உள்நாடு

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்

(UTV|கொழும்பு) – லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதுவரகம் தெரிவித்துள்ளது.

வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இலங்கை தூதரகம் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது லெபனானில் மூன்று நாட்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 4,000 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

editor

மனித உரிமை மீறல் : ஆராய மூவரடங்கிய குழு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு