உள்நாடு

லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் என லிட்ரோ தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தையில் சமீபகாலமாக லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு கடன் கடிதங்களை திறப்பதில் உள்ள சிரமம் தான் காரணம்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியான கலந்துரையாடலின் விளைவாக, எரிவாயு இருப்புக்களை விடுவிப்பது தொடர்பான கடன் கடிதங்களை நேற்றிரவுக்குள் திறக்க அரச வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அதன்படி, ஏற்கனவே நாட்டை வந்தடைந்த இரண்டு கப்பல்களும் தங்களுடைய எரிவாயு இருப்புக்களை இறக்கும் பணியை தொடங்கும், மேலும் லிட்ரோ ஒரு நாளைக்கு 80,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

Related posts

திட்டமிடப்பட்ட மின்தடை இன்று அமுலாகாது

ரிஷாதின் கைதும் ராஜபக்ஷவின் கொடூர ராணுவ முகமும்

இந்தியா-இலங்கை  தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து!