உள்நாடு

லங்கா ஐஓசி இனது பொதுமக்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிக்குள் மட்டுமே நேரடியாக பெட்ரோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி வெள்ளிக்கிழமை (20) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் இருந்து கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெட்ரோல் வழங்கப்படாது என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

Related posts

எல்பிட்டியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

இலங்கை பெண்களுக்கு இலவசமாக ஜப்பானில் வேலை வாய்ப்பு

வடக்கு புகையிரதத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 5 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்