உள்நாடு

லக்ஸபான வாழமலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட கரும்புலி உயிரிழப்பு

(UTV | கொழும்பு) -லக்ஸபான தோட்டம் வாழமலை பிரிவில்  வலையில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட அரிய வகை கரும்புலி இன்று (29) காலை உடவளவ சரணாலயத்தில் உயிரிழந்துள்ளதாக உடவளவ கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கடந்த (26) திகதி அன்று மரக்கறி தோட்ட பாதுகாப்பு வேலியில் சிக்கிய நிலையில் இக்கரும்புலி பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் குறித்த கரும்புலி மேலதிக சிகிச்சைகளுக்காக உடவளவ யானைகள் சரணாலயத்தின் கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பம்பலப்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

புதனன்று நாடு திரும்பும் கோட்டா