உள்நாடுசூடான செய்திகள் 1

ரோஹிங்யா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் – ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக இன்றைய தினம் (10) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘மியன்மார் ரோஹிங்யா அகதிகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும், அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்’ என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கோரிக்கை அடங்கிய கடிதமொன்றும் போராட்டக்காரர்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ்

கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் 18 மணி நேரம் நீர் விநியோக தடை