அரசியல்உள்நாடு

ரோயல் பார்க் கொலை வழக்கு – இழப்பீட்டை செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது சட்டத்தரணிகள் இன்று (11) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற சமர்ப்பணங்களை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தண்டனை விதிக்காததற்கான காரணங்களைக் குறிப்பிடுமாறு குறிப்பிட்டு இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் குறித்த இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் இந்த விவகாரம் குறித்து சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிக்கு நீதிபதிகள் குழு அறிவித்திருந்தது

Related posts

மினுவாங்கொடை – பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

editor

பாராளுமன்றம் ஒத்திவைப்பு